சிறந்த வழிபாடு !!!


மகாத்மா காந்தி* ஒரு செயல் நீதிக்கும், தர்மத்திற்கும் உடன்பட்டதா என்பதை செயலாற்று பவனின் நோக்கத்தைக் கொண்டே அறிய முடியும்.

*
வீடுகளில் கூட்டுப்பிரார்த்தனை மிக அவசியமானது.

*
மிதமாக சாப்பிடுவது நல்லது. சாப்பிட்ட பின்னும் கொஞ்சம் பசி உணர்ச்சி இருப்பது உடல்நலனுக்கு தேவையானது.

காந்திஜி


*
இறைவனோடு இரண்டறக் கலக்கும் நோக்கத்தோடு செயலாற்றுவதே வைராக்கிய வாழ்வாகும். இந்நிலை பெற மனமும் உடலும் நல்லவிஷயங்களில் மட்டுமே ஈடுபடுதல் வேண்டும்.

*
பெண்ணைப் பலமற்றவள் என்று கூறுவது அவளை நிந்திப்பதாகும். பெண்ணுக்கு உடல்பலம் குறைவு என்றாலும் ஆன்மபலம் மிக அதிகம்.

*
ஏழைகளுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு உலகில் வேறு கிடையாது.

*
ஆழ்ந்த நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. வழிபாட்டின் திறவுகோலாக பிரார்த்தனை அமைந்துள்ளது.

-
காந்திஜி
நன்றி தினமலர் 
அண்ணல் காந்தியடிகள்

Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi