கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள்..!


கஷ்டப்படுபவர்களுக்கு உதவுங்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணர்


* மனிதர்கள் பெண்ணாசையும், பணத்தாசையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணமே தீராத நோயாக அவர்களைப் பீடித்திருக்கிறது. இதிலிருந்து விடுபட நல்லவர்களோடு பழகுவது தான் சரியான தீர்வு.

*
சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும். அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல, எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்குள் ஆன்மிக விஷயம் எதுவும் உள்ளே போகாது.

*
மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடுதல் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

*
பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்வத்தை சுயநலத்தால் தனக்காகவே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு உதவி புரிய வேண்டும்.

*
மீன்கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்ற போது, சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும் .வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் அந்த நீரும் அகன்றுவிடும். அதுபோல உலகியலில் ஈடுபட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

-
ராமகிருஷ்ணர்
நன்றி தினமலர் 

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi