பைத்தியம் என்றாலும் பரவாயில்லை!


        இறைவனை வணங்குபவர்களை கேலிப் பார்வை பார்க்கிறது உலகம்.

பைத்தியம்
""இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், கடவுளாவது ஒன்றாவது'' என்று பேசுபவர்கள் எத்தனை பேர்! அது மட்டுமல்ல, இறைவனை வணங்குவோரை ""இப்படியும் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறானே'' என்று கேலியாகவும் சிரிக்கிறார்கள்.

அப்படி யார் சொன்னாலும் பரவாயில்லை. இறைவனை வணங்குவதை மட்டும் விட்டுவிடாதே என்கிறது இஸ்லாம். எல்லாப்புகழும் இறைவனுக்கே, இறைவனே அனைத்தையும் நிகழ்த்துகிறான் என்று அறுதியிட்டு சொல்கிறது இஸ்லாம் மார்க்கம்.

நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், ""மக்கள் உன்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லும் அளவு இறைவன் திருநாமத்தைத் துதித்துக்கொண்டே இரு,'' என்கிறார்கள். பிறகென்ன! இறைவனை வணங்குவதில் நமக்கு யார் தடை விதிக்க முடியும்! வீணர்களின் வெட்டிப்பேச்சை புறந்தள்ளி விட வேண்டியது தானே! இறைவணக்கம் குறித்து நாயகம்(ஸல்) அவர்கள் <உதிர்க்கும் மற்ற மணிமொழிகளையும் கேளுங்கள்.

* மனிதன் செய்யும் செயல்களில் மண்ணறை வேதனையை விட்டும் அவனைக் காப்பாற்றுவது அல்லாஹ்வுடைய திக்ரை விட (நினைவை விட) வேறு எதுவும் இல்லை.

* ஒவ்வொரு கல்லையும், மரத்தையும் நெருங்கும்போது அல்லாஹ்வின் திருநாமத்தைச் சொல்லுங்கள்.

Loose
* இறைவனை திக்ரு செய்பவன்(நினைப்பவன்) உயிருள்ளவன் ஆவான். திக்ரு செய்யாதவன் மரணித்தவன் போலாவான்.

ஆம்...இறைவனை நினைக்காதவன் ஏறத்தாழ நடைப்பிணமாகி விடும் போது, அந்த நடைப்பிணங்கள் சொல்வது பற்றி நமக்கென்ன கவலை! அல்லாஹ்வின் சிந்தனையுடன் வாழ்வோம். அவனையே தொழுவோம். நல்வழி நடந்து நன்மைகள் பெறுவோம்.

நன்றி 

தினமலர்

Prophet MohammadShare this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi