அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்


 
 
 
 
 சுவாமி விவேகானந்தர்

 *ஆன்மிக உயர்வு பெற வேண்டுமானால் மனதில் குறுகிய எண்ணங்களுக்கு இடம் தராதீர்கள்.

* தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடும் துணிவு பக்திக்கு மிக அவசியம்.

* எப்போதெல்லாம் சுயநலம் நமக்குள் எழுகிறதோ அப்போதெல்லாம் மன ஆற்றல் அனைத்தும் நாலாபுறமும் சிதறுகிறது.

வீரத்துறவி விவேகானந்தர்


* எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள். ஆனால், செயலால் ஏற்படும் விளைவு மனதில் பதிவுகளை உண்டாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

* புலன்கள் என்னும் குதிரைகளை மனம் என்னும் கடிவாளத்தால் இழுத்துப் பிடியுங்கள்.

* அறியாமை நம்மிடம் இருக்கும் வரை நம்மை விட்டுத் துன்பங்கள் விலகாது. இதற்கு ஒரே தீர்வு நாம் ஆன்மிக வலிமை மிக்க தூய்மையானவர்களாக மாறுவது தான்.

* நாய்க்கு சோறு இடுவதாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் கடவுளுக்குத் தான் நீங்கள் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள். 


விவேகானந்தர்
நன்றி
தினமலர்


Swami Vivekananda

Share this page :

.

.

Function Paper Cuttings

 
Contact Us :
SRI GURUMISSION TRUST
Villupuram Main Road
Kadaganur Post -605755
Villupuram District
Tamilnadu
India
Published by Ujiladevi